15-ஆவது பொதுத் தேர்தலில் பெஜுவாங் கட்சியின் பிரதமர் வேட்பளராக டாக்டர் மகாதீரா?

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 14 :

நாட்டின் 15-ஆவது பொதுத் தேர்தலில் (GE15) பெஜுவாங் வெற்றி பெற்றால், நாட்டை வழிநடத்த துன் டாக்டர் மகாதீர் முகமட்டை விட சிறந்த நபர் எவரும் இல்லை என்றும் நாட்டில் உள்ள மற்ற தலைவர்களை விட டாக்டர் மகாதீருக்கு அதிக திறமையும் அறிவும் உள்ளது என்று பெஜுவாங் கட்சியின் கூட்டரசு பிரதேச தலைவரான டத்தோஸ்ரீ கைருடின் அபு ஹாசன் கூறினார்.

“நாம் ஏன் பிரதமர் வேட்ப்பாளராக மகாதீரை பரிந்துரைக்கக் கூடாது? ஏனெனில் “டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், டத்தோஸ்ரீ நஜிப் அப்துல் ரசாக், டான்ஸ்ரீ முஹிடின் யாசின் மற்றும் பிறரின் திறமைகளுடன் மகாதீருடன் ஒப்பிட முடியாது” என்று அவர் மேற்கோள் காட்டினார்.

97 வயதான மகாதீர் குறைந்தது ஒரு வருடமாவது பணியாற்றியிருந்தால், நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒரு “மாஸ்டர் பிளான்” வரைய முடியும் என்றும் அவரை பிரதமர் வேட்பாளராக முன்மொழிவது தொடர்பில் யாரும் தலையிட வேண்டியதில்லை என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here