ஈப்போ, ஜூலை 24 :
இந்தாண்டு ஜனவரி முதல் வியாழன் (ஜூலை 21) வரை பேராக்கில் 48 மேல் சுவாசக் குழாய் தொற்று நோய் (URTI) வழக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில சுகாதாரம், சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் பசுமைத் தொழில்நுட்பக் குழுவின் தலைவர் முகமட் அக்மல் கமாருடின் தெரிவித்துள்ளார்.
அவற்றில் 40 தொற்றுக்கள் மேல்நிலைப் பள்ளிகளை உள்ளடக்கியவை என்றார்.
“இதைத் தொடர்ந்து ஒரு ஆரம்பப் பள்ளி, ஒரு முன்பள்ளி, ஒரு மதரஸா மற்றும் ஒரு தொழில்துறை பயிற்சி மையம் ஆகியவற்றில் தலா ஒரு சம்பவமும் மற்றும் மிகுதி நான்கு வழக்குகள் மற்றய பகுதிகளில் பரவியது.
“ஜூலை 21 நிலவரப்படி, நோயிலிருந்து 44 பேர் குணமடைந்ததால், அவற்றுடன் சம்மந்தப்பட்ட நோய் பரப்பும் இடங்கள் முடிவுக்கு வந்துள்ளன, அதே நேரத்தில் நான்கு மேல்நிலைப் பள்ளிகள் இன்னும் செயலில் உள்ளன” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
முகமட் அக்மல் கூறுகையில், இதுவரை இந்த நோய்த்தொற்று தொடர்பான இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றார்.