மக்களவையில் 2007 மற்றும் அதற்கு பிறகு பிறந்தவர்களுக்கு புகைபிடித்தல் தடை சட்ட மசோதா தாக்கல்

2007 மற்றும் அதற்கு பிறகு பிறந்தவர்களுக்கு சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கும் தலைமுறை endgame சட்டம் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் (ஜூலை 27) தாக்கல் செய்யப்பட்டது.

புகையிலை மற்றும் புகைத்தல் கட்டுப்பாடு மசோதா 2022 அதன் முதல் வாசிப்புக்காக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த மசோதா தற்போதைய மக்களவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

முன்மொழியப்பட்ட மசோதாவின்படி, 2007 மற்றும் அதற்குப் பிறகான ஆண்டுகளில் பிறந்த குழந்தைகள், 18 வயதை எட்டிய பிறகும், புகைபிடிப்பது, எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் அல்லது வேப் பொருட்கள் உட்பட எந்த வகையான புகைபிடிக்கும் பொருட்களை வாங்குவது அல்லது வைத்திருப்பது தடைசெய்யப்படும்.

இது தவிர, கடைக்காரர்கள் மற்றும் சிகரெட் விற்பனையாளர்கள் தடையின் கீழ் உள்ளவர்களுக்கு புகைபிடிக்கும் பொருட்களை விற்க அனுமதிக்கப்படுவதில்லை. ஜன. 1, 2005க்கு முன் பிறந்தவர்களுக்கு தடை விதிக்க அமைச்சகம் முதலில் முன்மொழிந்தது ஆனால் வயது வரம்பை ஜனவரி 1, 2007 ஆக உயர்த்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here