மித்ரா நிதியைப் பயன்படுத்தி, செலவினங்களுக்கான போலி ஆவணத்தை சமர்ப்பித்த குற்றச்சாட்டில் MIDF இன் முன்னாள் இயக்குநருக்கு RM85,000 அபராதம்

கோலாலம்பூர், ஜூலை 29 :

மலேசிய அறிவு வளர்ச்சி அறக்கட்டளையின் ( MIDF) முன்னாள் இயக்குநருக்கு, பணம் செலுத்தும் வவுச்சர்களைப் பொய்யாக்கியதற்காக RM85,000 அபராதம் விதிக்கப்பட்டது, அதனை செலுத்த தவறின் 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சுசானா உசேன் முன்னிலையில், எஸ்.எஸ்.விஜய குமார் (47) என்பவர் போலி ஆவணத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டை, அவர் ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு அபராதம் விதித்தார்.

தமிழ்ப் பள்ளிகளுக்குப் பிந்தைய கோவிட்-19 உதவித் (TAS-Covid) திட்டத்திற்கான இந்திய சமூக மாற்றப் பிரிவு (MITRA) நிதியைப் பயன்படுத்தி, அதன் செலவினங்களுக்கான கட்டண வவுச்சர்களைப் பொய்யாக சமர்ப்பித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றச்சாட்டின்படி, இப்போது சுயாதீன ஆலோசகராகப் பணிபுரியும் விஜய குமார், MIDF பேமெண்ட் வவுச்சர் எனக் கூறப்படும் ஆவணத்தை தவறாக பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டார், இது கை சுத்திகரிப்பான் வழங்கியதற்கான, நவம்பர் 24, 2020 தேதியிட்ட RM75,000 என குறிப்பிட்ட போலியான ஆவணம் என கூறப்பட்டது.

மித்ரா, தேசிய ஒற்றுமை அமைச்சகம், Lebuh Perdana Timur A, புத்ராஜெயாவில் கடந்த ஆண்டு ஜூலை 2 அன்று குற்றம் செய்யப்பட்டது.

அவர் மீது குற்றவியல் சட்டத்தின் 471வது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here