ஜார்ஜ்டவுனில் உள்ள கடை வீடுகளில் தீப்பரவல்

ஜார்ஜ்டவுன், ஆகஸ்ட் 1 :

இங்குள்ள ஜாலான் ஆயிரில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கடை வீடுகள் சேதமடைந்தன.

இன்று திங்கட்கிழமை காலை 6.10 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்து பேரிடர் அழைப்பு வந்ததாக பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

“தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு வந்தபோது, ஒரு கடை வீட்டில் தீப்பிடித்ததைக் கண்டோம்.

“அழிவுகளின் மதிப்பிடப்பட்ட அளவு சுமார் 80%” என்று அது இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறுகிறது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி, அஇச்சம்பவத்தில் உயிரிழப்பு அல்லது காயம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here