கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 :
மலேசிய சைபர் பாதுகாப்புத் துறையின் (CyberSecurity Malaysia) புதிய தலைவராக, முன்னாள் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் டான்ஸ்ரீ சுல்கிஃப்லி முகமட் ஜின் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் கடந்த ஜூலை 1 முதல் அமலுக்கு வந்தது என்று தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா அமைச்சர் டான்ஸ்ரீ அன்னுார் மூசா கூறினார்.
மலேசிய சைபர் பாதுகாப்புத் துறை தலைவராக இருந்த ஜெனரல் டான்ஸ்ரீ முகமட் அசுமி முகமட், ஜூன் 30 அன்று ஓய்வு பெற்றதைத் தொடர்ந்தே சுல்கிஃப்லி நியமிக்கப்பட்டார் என்று அவர் மேலும் கூறினார்.
“சுல்கிஃப்லி இராணுவம் மற்றும் பாதுகாப்பு சேவைகளில் 44 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றவர் என்றும் மலேசிய ஆயுதப்படையில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார்” என்றும் அன்னுார் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 1) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.