நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர் மஹுதா ஆகஸ்ட் 6 முதல் 9 வரை மலேசியாவிற்கு விஜயம்

புத்ராஜெயா, ஆகஸ்ட் 6 :

நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர் நனையா மஹுதா ஆகஸ்ட் 6 முதல் 9 வரை மலேசியாவிற்கு தனது அதிகாரப்பூர்வ பயணமாக மலேசியாவிற்கு விஜயம் மேற்கொள்கிறார். அவரை வெளிவிவகார அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் அப்துல்லா வரவேற்பார் எனவும் நவம்பர் 2020 இல் தனது தற்போதைய பதவியை ஏற்றுக்கொண்ட பிறகு, மஹுதாவின் முதல் மலேசியா வருகை இதுவாகும்.

மலேசியாவின் வெளியுறவு அமைச்சகம், சனிக்கிழமை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இரு அமைச்சர்களும் பல்வேறு இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச பொது நலன்கள் குறித்து சந்தித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள திட்டமிட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள வலுவான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு பொருத்தமான இருதரப்பு விஷயங்கள் குறித்து ஆராய்வது அவர்களின் கலந்துரையாடலின் பிரதான நோக்கத்தில் ஒன்றாகும். மேலும் பரஸ்பர நலன்களுக்கான சாத்தியமான பன்முக ஒத்துழைப்புகளை ஆராய இரு நாடுகளுக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூர்வகுடி சமூகங்கள் தொடர்பான ஒத்துழைப்பு குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்காக, ஊரக வளர்ச்சி அமைச்சர் டத்தோஸ்ரீ மஹ்டிசிர் காலிட்டையும் மஹுதா சந்திக்க உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here