சிரம்பான், ஆகஸ்ட் 9 :
இந்த ஆண்டு ஜூன் 30 ஆம் தேதியின்படி, நெகிரி செம்பிலான் மாநிலம் RM284.93 மில்லியன் வருவாயைப் பதிவு செய்துள்ளது, இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட சிறப்பாக உள்ளது என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹாருன் இன்று நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற (DUN) கூட்டத்தில் கூறினார்.
கடந்த ஆண்டு RM234.93 மில்லியனுடன் (52.44 சதவீதம்) ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த வருவாய் வசூல் 65.96 சதவீதமாக அதிகரித்து உள்ளது என்றார்.
மேலும், இந்தாண்டு வரிப்பணம் மூலமான வருவாய் RM134.0 மில்லியன் பதிவு செய்யப்பட்டுள்ளது, இது 2021 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் RM129.84 மில்லியன் வரி வருவாயை விட அதிகமாகும்.
அத்தோடு “ஜூன் 30, 2021 அன்று RM72.97 மில்லினாக இருந்த வரி அல்லாத வருவாய் இந்தாண்டு RM116.44 மில்லியனாக இருந்தது” என்று இந்தாண்டிற்கான மாநில அரசின் வருவாய் பற்றி டத்தோஸ்ரீ முகமட் ஹசானின் (BN-Rantau) கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.