சிலாங்கூரில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தடை செய்ய உத்தேசம்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 :

சிலாங்கூரில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து வணிக வளாகங்களிலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதற்கான தடையை அமல்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

சுற்றுச்சூழல், பசுமைத் தொழில்நுட்பம், அறிவியல், பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் நுகர்வோர் விவகாரங்களுக்கான மாநில நிலைக்குழுவின் தலைவர் ஹீ லாய் சியான் கூறுகையில், நுகர்வோர் மீது 20 சென்ட் கட்டணம் விதிக்கப்பட்ட போதிலும், பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு இன்னும் அதிகமாக இருப்பதை காணமுடிகிறது என்றார்.

அதன்படி, நாம் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை இவ்விரு நாட்களில் முற்றாக தடை செய்வது தொடர்பான புதிய அமலாக்கம் தொடர்பான விவாதம் மற்றும் விரிவான ஆய்வில் தமது தரப்பு தற்போது ஈடுபட்டு உள்ளது என்றார்.

“2020 ஆம் ஆண்டில் பிளாஸ்டிக் பைகளின் வசூல் மொத்தம் RM5.8 மில்லியனாக இருந்ததாகவும், அது கடந்த ஆண்டு RM6.8 மில்லியன் வரை அதிகரித்து வருவதாகவும் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன என்றார்.

“எனவே, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து பதிவு செய்யப்பட்ட வளாகங்களிலும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தடை செய்ய திட்டமிட்டுள்ளோம்,” என்று அவர் இன்று தாமான் ஆலாம் பெர்டானா மின்-கழிவு சேகரிப்பு மையம், புன்காக் ஆலம் திறப்பு விழாவிற்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

அதே சமயம், சிறு வியாபாரிகளுக்கு, குறிப்பாக சாலையோரங்களில் விற்பனை செய்பவர்களுக்கு இந்தத் தடை பொருந்தாது என்றும் லாய் சியான் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here