உணவகத்தின் கழிப்பறையில் ஊனமுற்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சக ஊழியர் கைது

அலோர் ஸ்டார், ஆகஸ்ட் 15 :

கடந்த மாதம் இந்த நகரத்தில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்தின் கழிப்பறையில் தனது சக ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

ஆகஸ்ட் 1 ஆம் தேதி கோத்தா ஸ்டார் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் (IPD) 22 வயது ஊனமுற்ற பெண்ணின் (OKU) தாயார் செய்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து, அந்த 21 வயது இளைஞன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

பலாத்காரக் குற்றத்திற்காக தண்டனைச் சட்டத்தின் 376-வது பிரிவின் கீழ் புகாரளிக்கப்பட்டவுடன், அந்த நபர் கைது செய்யப்பட்டதாக கோத்தா ஸ்டார் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் அஹ்மத் ஷுக்ரி மாட் அகிர் தெரிவித்தார்.

இது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த நபருக்கு 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், பிரம்படியும் விதிக்கப்படலாம் என்றார்.

“பாதிக்கப்பட்டவரின் அனுமதியின்றி, உணவகத்தில் உள்ள ஆண்களுக்கான கழிவறைக்குள் அந்தப் பெண் வலுக்கட்டாயமாக தள்ளப்பட்ட பின்னர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்ள வற்புறுத்தப்பட்டார்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சந்தேக நபர் ஏற்கனவே அலோர் ஸ்டார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று குற்றஞ்சாட்டப்பட்டதாகவும், அடுத்த விசாரணை தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாகவும் அஹ்மட் ஷுக்ரி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here