வாய்க்காலில் தவறி விழுந்த பள்ளி வேனுக்கு சாலை வரி மற்றும் காப்பீடு இல்லை

கோலாலம்பூர், ஆகஸ்ட் 17 :

சுங்கை பட்டாணியில் உள்ள திக்காம் பத்து என்ற இடத்தில், பள்ளி வேன் வாய்க்காலில் தவறி விழுந்து 16 மாணவர்கள் காயம் அடைந்த சம்பவத்தில், குறித்த பள்ளி வேன் காப்பீடு மற்றும் சாலை வரி இல்லாமல் பயணித்ததாக அறியமுடிகிறது.

நேற்று காலை 7.40 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், வேனின் 43 வயது ஓட்டுநருக்கு தலையில் சிறு காயம் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசாரின் விசாரணைகளின்படி தெரியவந்துள்ளது.

கோல மூடா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ஜைதி சே ஹாசன் கூறுகையில், வேனுக்கான காப்பீடு மற்றும் சாலை வரி இந்த ஆண்டு மார்ச் 9 ஆம் தேதியுடன் காலாவதியாகிவிட்டதாக சோதனையில் தெரியவந்துள்ளது என்றார்.

இந்தப் பள்ளி வேன் 7 முதல் 12 வயதுக்குட்பட்ட 10 சிறுவர்கள் மற்றும் 6 சிறுமிகளை ஏற்றிக்கொண்டு தாமான் செஜாதியில் இருந்து பயணித்துக்கொண்டிருந்தபோது, தாமான் ருவுக்கு அருகில் உள்ள சாலையில் சறுக்கி அருகிலுள்ள வாய்க்காலில் விழுந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here