இரண்டு GPA போலீஸ் அதிகாரிகளை சுத்தியலால் தாக்கிய அல்ஜீரியர் கைது

கோலாலம்பூர், ஆகஸ்ட் 23 :

இன்று அதிகாலை கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்திற்குள் (IPK) புகுந்த அல்ஜீரிய நாட்டவர் ஒருவர், காவலர் இல்லத்தில் இருந்த இரண்டு போலீசாரை சுத்தியலால் தாக்கியதன் காரணமாக கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவத்தில் அதிகாலை 1.40 மணியளவில் காவலிலிருந்த GPA போலீஸ்காரரின் குடிலுக்கு வந்த சந்தேக நபர், அவரிடம் ஏதோ கேட்க முயன்றார். பின் திடீரென ஒரு இரும்புச் சுத்தியலை எடுத்து, அங்கிருந்த ஒரு உறுப்பினரின் தலையில்அடித்தார்.

“ஒரு GPA போலீஸ் உறுப்பினரை காயப்படுத்திய பிறகு, சந்தேக நபர் IPK பகுதிக்குள் ஓடி, HK MP5 துப்பாக்கியை ஏந்திய மற்றொரு உறுப்பினரைத் துரத்தும்போது அவரின் முதுகில் சுத்தியலால் தாக்கினார் என்று கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அஸ்மி அபு காசிம் கூறினார்.

சந்தேக நபரின் ஆக்ரோஷமான நடத்தை காரணமாக, போலீசாருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்ட்து என்றார்.

இதன்போது சந்தேக நபருக்கு காயம் ஏற்பட்டதாகவும், காயங்கள் காரணமாக சந்தேக நபர் சிகிச்சைக்காக கோலாலம்பூர் (HKL) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், மேலும் இரண்டு GPA உறுப்பினர்களும் மேல் சிகிச்சைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

இதற்கிடையில், டாங் வாங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் நூர் டெல்ஹான் யஹாயா கூறுகையில், சந்தேக நபரின் செயல்களின் உண்மையான நோக்கம் பற்றிய தகவல்களைப் பெறுவதற்காக அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here