வெள்ள பாதிப்பு; அனைத்துலக நாடுகளிடம் உதவி கோரும் பாகிஸ்தான்

இஸ்லமாபாத், ஆகஸ்ட் 24:

நிதி நெருக்கடியில் தள்ளாடும் பாகிஸ்தான், அண்மையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் இருந்து மீள சர்வதேச நாடுகளிடம் உதவி கோரியுள்ளது. பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மற்றும் சிந்த் மாகாணங்களில் கனமழை கொட்டி வருகிறது.

பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்ததால் வெள்ளக்காடாகின. கைபர் -பகதுன்க்வா மாகாணத்திலும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல மக்கள், வீடுகளில் இருந்து வெளியேறி நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

வெள்ள பாதிப்பால் 830 பேர் கொல்லப்பட்டனர். 1,348- பேர் காயம் அடைந்தனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ 25 ஆயிரம் நிவாரண உதவியாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்தார்.

இதற்காக 37.2 பில்லியன் டாலர் நிதியை ஒதுக்கியிருப்பதாக தெரிவித்த பாகிஸ்தான் அரசு, நிவாரணப்பணிகளுக்காக இன்னும் 80 பில்லியன் டாலர் நிதி தேவைப்படுவதால் சர்வதேச நாடுகள் உதவி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

மனிதாபிமான உதவியாக 76 மில்லியன் உதவி அளிக்கப்படுவதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here