குழந்தை பராமரிப்பாளரின் வீட்டில் மயங்கிய நிலையில் காணப்பட்ட 10 மாத பெண் குழந்தை இறந்தது

ஷா ஆலமில் கடந்த  ஆகஸ்ட் 19 ஆம் தேதி செக்‌ஷன் 17இல் தனது குழந்தை பராமரிப்பாளரின் வீட்டில் மயங்கிய நிலையில் காணப்பட்ட 10 மாத பெண் குழந்தை நூர் அவ்லியா டெலிஷா முகமது கைருல் மூன்று நாட்களுக்குப் பிறகு ஷா ஆலம் மருத்துவமனையில் இறந்தார் என்பதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆகஸ்ட் 19 அன்று இரவு 8 மணியளவில் பாதிக்கப்பட்ட பெண்ணின் 33 வயது தந்தையிடமிருந்து காவல்துறைக்கு ஒரு புகார் கிடைத்தது என்று ஷா ஆலம் OCPD உதவி ஆணையர் முகமட் இக்பால் இப்ராஹிம் கூறினார்.

36 வயதுடைய பெண் தங்கள் குழந்தை சுயநினைவில் இல்லை என்று கூறியதையடுத்து, பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் அதே நாளில் மாலை 4 மணியளவில் குழந்தை பராமரிப்பாளரின் வீட்டிற்குச் சென்றதாக அவர் கூறினார்.

அவர்கள் தங்கள் குழந்தையை செக்‌ஷன்19 இல் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு ஒரு மருத்துவரின் பரிசோதனையில் அவரது நெற்றியில் காயங்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். மேலும் பாதிக்கப்பட்டவருக்கு மூளையில் இரத்தப்போக்கு ஏற்பட்டதாக மருத்துவர் சந்தேகிக்கிறார் என்று அவர் கூறினார்.

ஏசிபி முகமது இக்பால் கூறுகையில், கர்ப்பிணியான குழந்தை பராமரிப்பாளர் உதவியின்றி வீட்டில் மூன்று மாதங்கள் முதல் நான்கு வயது வரை உள்ள ஏழு குழந்தைகளையும் கவனித்து வருகிறார். மேலும் விசாரணை இன்னும் நடந்து வருகிறது. மேலும் இந்த வழக்கு குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31(1)(a) இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

ஏசிபி முகமட் இக்பால் பொதுமக்கள் ஊகங்களை செய்ய வேண்டாம் என்றும், சம்பவம் தொடர்பான எந்தத் தகவலையும் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் ரோஷாசாவுக்கு 011-39865668 என்ற எண்ணில் தெரிவிக்குமாறு அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here