சாலையோர உணவகத்தில் புதிதாக பிறந்த ஆண் குழந்தை கண்டெடுப்பு

கோத்த கினபாலு, லஹாட் டத்துவில் சாலையோர உணவு நடத்துபவர் ஒருவர், தனது கடையில் மேசையில் புதிதாகப் பிறந்த ஆண் குழந்தையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 2) காலை 7 மணியளவில் குழந்தை ஆடையின்றி கண்டுபிடிக்கப்பட்டது.

லஹாட் டத்து OCPD உதவி ஆணையர் ரோஹன் ஷா அஹ்மட் கூறுகையில், ஜாலான் தெங்கா நிபாவிலிருந்து கம்போங் ஜெயா பாருவின் 5ஆவது மைலில் ஸ்டால் இருந்த 30 வயதுடைய நபர், உடனடியாக காவல்துறையை எச்சரித்தார். 2.9 கிலோ எடையுள்ள குழந்தை, ஆம்புலன்சில் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

குற்றவியல் சட்டத்தின் 317ஆவது பிரிவின் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். ஏசிபி ரோஹன், வழக்கு தொடர்பான தகவல் அறிந்தவர்கள்  விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் மார்லிசா மைதிகா @ மர்டேகாவை 016-219 4554 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here