நவம்பரில் பெரும் வெள்ளத்துக்கு வாய்ப்பு; மலேசிய வானிலை ஆய்வு மையம் தகவல்

கோலாலம்பூர், செப்டம்பர் 2 :

நாட்டில் வரும் நவம்பர் நடுப்பகுதியில் இருந்து பெய்யும் தொடர் கனமழையால் பெரிய அளவிலான வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அதன் இயக்குநர் ஜெனரல் முஹமட் ஹெல்மி அப்துல்லா கூறுகையில், இந்த காலகட்டத்தில் வழமையாக பெய்யும் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து, கனமழை பெய்யும், இதுவே பெரிய வெள்ளத்திற்கு வழிவகுக்கும் என்று கூறினார்.

லா நினா நிகழ்வு அடுத்த ஆண்டு தொடக்கம் வரை நீடிக்கும் அத்தகைய வானிலையை தீவிரப்படுத்தும் என்றார்.

மேலும் அக்டோபரில் பலத்த காற்று, கடும் மழை மற்றும் திடீர் வெள்ளம் போன்றவற்றைக் கொண்டு வரும்.

“பொதுத் தேர்தல் நவம்பர் தொடக்கத்தில் நடத்தப்பட்டால், அது பெரும் வெள்ளத்தை சந்திக்கும் சாத்தியக்கூறுகள் குறைவு. ஆனால் நவம்பர் நடுப்பகுதியின் பின்னர் நடத்தப்பட்டால், அது நவம்பர் இறுதி வரை பெரிய வெள்ளபெருக்கு அபாயத்தை ஏற்படும் எதிர்பார்க்கப்படுகிறது.

“GE15 டிசம்பரில் இருந்தால், வடகிழக்கு பருவமழையால் அது தொடர்ந்தும் கனமழை மற்றும் பெரும் வெள்ளத்தை எதிர்கொள்ளும் வாய்ப்பு அதிகம்,” என்றார்.

பருவமழை மாற்றக் கட்டம் வழக்கமாக செப்டம்பர் இறுதியில் தொடங்கி நவம்பர் தொடக்கம் வரை நீடிக்கும் என்றார்.

“இந்த காலகட்டம் முழுவதும், நாடு முழுவதும் காலையில் வானிலை பொதுவாக நன்றாக இருக்கும், நண்பகல் முதல் மாலை வரை, குறிப்பாக மேற்கு கடற்கரையில், தீபகற்பத்தின் உட்புறம், மேற்கு மற்றும் மத்திய சரவாக் மற்றும் மேற்கு சபாவில் அடிக்கடி இடியுடன் கூடிய மழை பெய்யும்.

தீபகற்பத்தின் மேற்குக் கரையோரப் பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்று ஹெல்மி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here