அங்கீகரிக்கப்பட்ட அனைத்துலக இசை நிகழ்ச்சிகள் தொடரலாம் என்கிறார் கூட்டரசு பிரதேச அமைச்சர்

அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்ற சர்வதேச கலைஞர்களின் கச்சேரிகள் திட்டமிட்டபடி தொடரும் என்று கூட்டரசு பிரதேச  அமைச்சர் டத்தோஸ்ரீ ஷாஹிதான் காசிம் கூறினார்.

இன்னும் அங்கீகரிக்கப்படாத இசை நிகழ்ச்சிகள் மலேசிய கலாச்சாரத்திற்கு பொருந்துமா என மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் அவர் கூறினார். அனைத்துலக நிகழ்ச்சிகள் பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல் நேர்மறை மதிப்புகளை ஊக்குவிக்க வேண்டும் என்றார்.

ஞாயிற்றுக்கிழமை, ஷாஹிடான், கச்சேரிகளுக்கான ஒப்புதல்களை அவற்றின் பொருத்தத்தை உறுதிப்படுத்த மாநகர மன்றம் மதிப்பாய்வு செய்யும் என்றார்.

கடந்த மாதம், PAS இன் இளைஞர் பிரிவு, நாட்டில் அனைத்துலக இசை நிகழ்ச்சிகளை மத்திய அரசு தொடர்ந்து அனுமதித்தால், நாடு தழுவிய போராட்டங்களுக்கு வீதியில் இறங்கப் போவதாக அச்சுறுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here