இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை நாடு முழுவதும் 1,055 சிறுவர்கள் சித்ரவதை

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை சமூக நலத்துறை (ஜேகேஎம்) மூலம் நாடு முழுவதும் மொத்தம் 1,055 குழந்தைகள் சித்ரவதைக்கு ஆளாகியிருப்பதாக  பதிவு செய்யப்பட்டுள்ளன.

துணை பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோ சிட்டி ஜைலா முகமட் யூசோப் கூறுகையில், உடல் ரீதியான துன்புறுத்தல் 578 வழக்குகள் (54.8 %), அதைத் தொடர்ந்து பாலியல்  பலாத்காரம் (417 வழக்குகள் அல்லது 39.6%) மற்றும் உணர்ச்சி ரீதியான துன்புறுத்தல் (60 வழக்குகள் அல்லது 5.6%). மொத்தத்தில், 706 வழக்குகள் அல்லது 68%, பெண்களை உள்ளடக்கியது. 349 அல்லது 33 % சிறுவர்களை உள்ளடக்கியது என்று அவர் மேலும் கூறினார்.

இந்தக் குற்றங்கள் சிறுவர் சட்டம் 2001 இன் கீழ் தண்டிக்கப்படலாம், மேலும் இந்த வழக்கில் மருத்துவப் பயிற்சியாளர்கள், பாதுகாவலர்கள் மற்றும் குழந்தை பராமரிப்பாளர்கள் என மூன்று தரப்பினர் உதவ வேண்டும்.

எந்தவொரு துன்புறுத்தல் வழக்குகளையும் புகாரளிக்க அவர்கள் கடமைப்பட்டுள்ளனர் என்று அவர் இன்று குழந்தைகளுக்கு எதிரான ஆன்லைன் பாலியல் குற்றங்களை எதிர்த்துப் போராடும் பிரச்சாரத்தைத் தொடங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

2020 முதல் 2022 வரை 4,256 துஷ்பிரயோக வழக்குகள் சிலாங்கூரில் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து கோலாலம்பூர் (2,131), சபா (1,239) மற்றும்  ஜோகூர் (1,155) ஆகிய இடங்கள் உள்ளன.

போலீஸ் புள்ளிவிபரங்களின்படி, ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட மொத்தம் 1,348 பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது 641 கற்பழிப்பு, கூட்டு பலாத்காரம் (47), பாலுறவு (127), இயற்கைக்கு மாறான பாலியல் உறவு (95) மற்றும் பாலியல் வன்கொடுமை (438).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here