பத்து பஹாட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, நிவாரண மையங்களில் தங்கியுள்ளோர் எண்ணிக்கை 263 பேராக அதிகரிப்பு

பத்து பஹாட், செப்டம்பர் 16 :

இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண மையங்களில் தங்கியுள்ளோர் எண்ணிக்கை 263 ஆக அதிகரித்துள்ளது.

ஸ்ரீ காடிங்கைச் சுற்றியுள்ள 74 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று பத்து பஹாட் மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழு (JPBD) செயலகம் தெரிவித்தது.

“நேற்று இரவு 8 மணியளவில் பாதிக்கப்பட்ட 72 குடும்பங்களைச் சேர்ந்த 255 பேருடன் ஒப்பிடும்போது, இப்போது இந்த எண்ணிக்கை அதிகரிப்பைக் காட்டுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.

“அவர்கள் அனைவரும் SMK ஸ்ரீ காடிங்கில் உள்ள தற்காலிக நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

“பாதிக்கப்பட்டவர்கள் தாமான் ஸ்ரீ பஞ்சோர், கம்போங் செங்குவாங், கம்போங் பாரு ஸ்ரீ காடிங், கம்போங் ஸ்ரீ தஞ்சோங் மற்றும் பெக்கான் ஸ்ரீ காடிங் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள்” என்று அது இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

நேற்று அதிகாலை 1.30 மணி தொடக்கம் 4 மணிவரை பெய்த கடும் மழையினைத் தொடர்ந்து வெள்ளம் ஏற்பட்டதாகவும், அதிக அலையினால் ஏற்பட்ட மோதலினால் பிரதேசத்தில் வெள்ள நிலைமை மோசமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

“இதுவரை, ஒரு பிபிஎஸ் மட்டுமே நேற்று அதிகாலை 1.30 மணி முதல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடமளிக்கிறது. இன்று நண்பகல் 12 மணி முதல் வானிலை தெளிவாக இருக்கிறது” என்று அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here