மேற்கு நேபாளத்தில் இன்று கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர் மற்றும் 10 பேரை காணவில்லை.
காத்மாண்டு, மேற்கு நேபாளத்தில் நிலச்சரிவு காரணமாக அச்சாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர் மற்றும் 20 பேரை காணவில்லை என்று முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேற்கு நேபாளத்தில் இன்று கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏழு பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை அடுத்து, உடனடியாக தேடுதல் மற்றும் மீட்பு பணிக்காக ஹெலிகாப்டர்களை அனுப்ப உள்துறை மந்திரி உத்தரவிட்டுள்ளார்.
இதன் காரணமாக காணாமல் போனவர்களில் இதுவரை 10 பேர் மீட்கப்பட்டனர். மேலும் 10 பேரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.