வெள்ள நிலைமை சீரடைந்ததை தொடர்ந்து, நிவாரண மையங்களில் தங்கியுள்ளோர் எண்ணிக்கை 213 ஆக குறைந்தது

பத்து பஹாட், செப்டம்பர் 17 :

இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 17) காலை 8 மணி நிலவரப்படி, பத்து பஹாட் மாவட்டத்திலுள்ள தற்காலிக வெள்ள நிவாரண மையத்தில் தங்கியிருந்த 232 பேருடன் ஒப்பிடும்போது, மாலை 4 மணிக்கு அதன் எண்ணிக்கை 213 பேராக குறைந்துள்ளது.

67 குடும்பங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட அனைவரும், கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 14) முதல் திறந்திருக்கும் SMK ஸ்ரீ காடிங்கின் தற்காலிக நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று, மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழு (JPBD) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதன் கிழமை அதிகாலை 1.30 மணி முதல் 5.30 மணி வரை பெய்த கனமழை மற்றும் அதிக அலைகள் காரணமாக மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here