ஜோகூர் பாரு, செப்டம்பர் 22 :
பார்ட்டி அமானா நெகாரா (அமானா) துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சலாவுடின் அயூப் ஜோகூர் பக்காத்தான் ஹராப்பானின் (PH) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பூலாய் நாடாளுமன்ற உறுப்பினரும் சிம்பாங் ஜெராம் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் சலாவுடினுக்கு, மாநில அமானா தலைவர் அமினோல்ஹுடா ஹாசன், லெடாங் எம்பி சையத் இப்ராஹிம் சையத் நோ மற்றும் ஜோகூர் DAP தலைவர் லீவ் சின் டோங் ஆகிய மூவர் துணை தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜோகூர் பக்காத்தான் செயலாளராக ஃபைசுல் சலேயும் (அமானா), பொருளாளராக எஸ். கோபாலகிருஷ்ணனும் (PKR), தகவல் தலைவராக ஷேக் உமர் பகாரிப் அலியும் (DAP) நியமிக்கப்பட்டுள்ளனர்.