ஜோகூரில் 6 தற்காலிக நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன

ஜோகூர் பாருவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 128 பேருக்கு தங்குமிடமாக ஜோகூரில் ஆறு வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழுக்களின் கூற்றுப்படி, ஜோகூர் பாரு, பொந்தியான் மற்றும் பத்து பஹாட் ஆகிய இடங்களில் தலா இரண்டு வெள்ள நிவாரண மையங்கள் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 25) காலை செயல்படத் தொடங்கின.

இதைத் தொடர்ந்து மாநிலத்தின் சில பகுதிகளில் காலை 6.30 மணி முதல் மழை பெய்தது. பொந்தியானில்  15 குடும்பங்களைச் சேர்ந்த 54 பாதிக்கப்பட்டவர்கள் Sekolah Agama Kayu Ara Pasong வெள்ள நிவாரண மையத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

அதே சமயம் பெக்கான் நானாஸில் உள்ள கம்பூங் சுங்கை முலிஹ்வைச் சேர்ந்த மூன்று பேர் கொண்ட குடும்பம் சுங்கை தெம்பாயனில் உள்ள Pusat Kokurikulum ஜோகூருக்கு அனுப்பப்பட்டனர்.

பத்து பஹாட்டில், கம்போங் ஶ்ரீ  பெங்கலில் உள்ள 11 குடும்பங்களைச் சேர்ந்த 29 பேர் Sekolah Agama Seri Bengkal  தஞ்சம் புகுந்துள்ளனர். அதே சமயம் கம்போங் பிண்டாங் பெசெராய்யில் உள்ள ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் தற்போது SK Bintang Peserai தங்கியுள்ளனர்.

இதற்கிடையில், ஜோகூர் பாருவில், தாமான் டத்தோ சையத் முகமட் இட்ரஸ் மற்றும் கம்போங் பாரு  கிளாங் பஹாட் ஆகிய இடங்களில் வசிக்கும் 17 பேர் டேவான்ராயா கேலாங் பாத்தாவுக்கு சென்றுள்ளனர்.

ஜோகூரின் பெரும்பாலான பகுதிகளில் டாங்காக், மூவார், பத்து பஹாட், குளுவாங், மெர்சிங், பொந்தியான், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாரு போன்ற பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here