சுற்றுலா சோகத்தில் முடிந்தது; பிக்கப் பள்ளத்தில் விழுந்ததில் பெண் ஒருவர் மரணம்- 13 பேர் காயம்

கூச்சிங், செப்டம்பர் 26 :

நேற்று மாலை, இங்குள்ள படவானில் உள்ள போர்னியோ ஹைலேண்ட் ரிசார்ட்டில் இருந்து, சாலையில் இறங்கும் போது, அவர்கள் பயணம் செய்த பிக்கப் வாகனம் ​​9 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் சறுக்கி விழுந்ததில், ஒரு பெண் இறந்தார் மற்றும் 13 பேர் காயமடைந்தனர்.

இச்சம்பவத்தில், உயிரிழந்தவர் 22 வயதான யோவ் எஸ்ஸீ ஈ என அடையாளம் காணப்பட்டார்.

விபத்து ஏற்படுவதற்கு முன்னர், 14 பேர் கொண்ட குடும்பம் மலைப் பகுதியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியில் பொழுது போக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது.

சரவாக் தீயணைப்பு செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், குறித்த சம்பவம் தொடர்பில் பிற்பகல் 2.44 மணிக்கு தமக்கு தகவல் கிடைத்ததாகவும், அதனைத் தொடர்ந்து சிபுரான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் மற்றும் சிம்போக் தன்னார்வ தீயணைப்புப் படை ஆகியவற்றின் உறுப்பினர்களை குறித்த பகுதிக்கு உடனே அனுப்பிவைக்கப்பட்டதாகவும் கூறினார்.

“முதலில் பாதிக்கப்பட்டவர் மாலை 3.45 மணிக்கு வெற்றிகரமாக மீட்கப்பட்டார், பாதிக்கப்பட்டவர்களில் இறுதி நபர் இரவு 7.30 மணிக்கு வெற்றிகரமாக மீட்கப்பட்டார்,” என்று அவர் நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

காயமடைந்த அனைவரும் மேலதிக சிகிச்சைக்காக மலேசிய சுகாதார அமைச்சகத்தின் ஆம்புலன்சில் ஒப்படைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த மீட்பு நடவடிக்கை இரவு 7.39 மணிக்கு நிறைவடைந்தது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here