ஜாலான் அம்பாங்கில் 51வது மாடி கட்டடப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி உடல் நசுங்கி மரணம்

கோலாலம்பூரில் உள்ள ஜாலான் அம்பாங்கில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் 51வது மாடியில் நடந்த விபத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் இன்று நள்ளிரவு 12.23 மணியளவில் பேரிடர் அழைப்பு வந்ததாகவும், 20 பணியாளர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பியதாகவும் தெரிவித்தனர்.

Oxley Tower திட்டத்தின் 51வது மாடியில் உள்ள கான்கிரீட் இடிந்து விழுந்து, இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி பலியானார். பாதிக்கப்பட்டவரை பிரித்தெடுக்க தீயணைப்பு வீரர்கள் கான்கிரீட்டை வெட்ட வேண்ட்டி இருந்ததாக  ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. காலை 7.20 மணியளவில் சடலம் பிரித்தெடுக்கப்பட்டது. பலியானவர் வங்காளதேச கட்டுமான தொழிலாளி என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. அவரது உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here