பினாங்கில் RM764,000 மதிப்புள்ள சிகரெட்டுகளை கடத்திய நால்வர் கைது

ஜார்ஜ் டவுன், செப். 29 :

புக்கிட் மெர்தாஜாமில், கடந்த திங்கள்கிழமை (செப்.26) RM764,000 மதிப்புள்ள சிகரெட்களைக் கடத்திய சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

காலை 6.30 மணியளவில் மாநில குற்றப் புலனாய்வுத் துறையின் D9 (சிறப்பு விசாரணை) மற்றும் D8 (சிறப்பு நடவடிக்கை) ஆகிய போலீஸ் குழுவால் நடத்தப்பட்ட Ops Kontraban என்ற குறியீட்டு பெயர் கொண்ட நடவடிக்கையின் போது, சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பினாங்கு காவல்துறைத் தலைவர், ஆய்வாளர் டத்தோ முஹமட் ஷுஹைலி முஹமட் ஜெயின் தெரிவித்தார்.

பெர்மாடாங் திங்கி தொழில் பூங்கா மற்றும் சென்ட்ரல் செபராங் பிறையில் உள்ள புக்கிட் தெங்கா ஐகேஎஸ் பூங்காவில் உள்ள இரண்டு சேமிப்பு களஞ்சியங்களில் போலீசார் நடத்திய முதல் சோதனையில் 174 சட்டவிரோத சிகரெட் பெட்டிகளும், இரண்டாவது சோதனையில் 24 பெட்டிகளும் போலீசார் கண்டுபிடித்தனர்.

இந்த சோதனையின் போது, ​​மொத்தம் RM236,000 மதிப்புள்ள நான்கு வாகனங்கள் மற்றும் ஒரு லோரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைப்பற்றப்பட்ட சட்டவிரோதமான சிகரெட்டுகளுக்கான வரி RM1,322,640 என ஆணையர் முகமட் ஷுஹைலி தெரிவித்தார்.

” 40-55 வயதுடைய நான்கு சந்தேக நபர்களும் சுங்கச் சட்டம் 1967 இன் பிரிவு 116C இன் கீழ் கைது செய்யப்பட்டு செப்டம்பர் 27 முதல் 14 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்,” என்று மாநில காவல்துறை தலைமையகத்தில் இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here