ஜோகூரில் போக்குவரத்து சம்மன்களை செலுத்த அக்.2 ஆம் தேதி வரை 50% கழிவு

ஜோகூர் பாரு: RM340 மில்லியன் மதிப்பீட்டில் மொத்தம் 2.3 மில்லியன் நிலுவையில் உள்ள சம்மன்கள் 2014 முதல் இன்று வரை ஜோகூர் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் ஓட்டுநர்கள் மொத்தம் 109,758 சம்மன்கள் அனுப்பப்பட்டதாக ஜோகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ கமருல் ஜமான் மாமத் தெரிவித்தார்.

இதுவரை 600,000 சம்மன்கள் மட்டுமே தீர்க்கப்பட்டுள்ளன. பதிவுசெய்யப்பட்ட மிக அதிகமான போக்குவரத்து குற்றங்களில், வேக வரம்பை மீறி வாகனம் ஓட்டுவது மற்றும் போக்குவரத்து விளக்குகளை புறக்கணிப்பது ஆகியவை அடங்கும்  என்று அவர் ஜோகூர் போலீஸ்  தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

எனவே, அனைத்து போக்குவரத்து விதிகளையும் மீறுபவர்கள், மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட காவல் நிலையங்களில் உள்ள போக்குவரத்து காவல் நிலையங்களில் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை 50% தள்ளுபடி சலுகைகளை இன்று தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (அக். 2) வரை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here