சுங்கை பட்டாணி, அக்டோபர் 4 :
இங்கு அருகே உள்ள ஜாலான் அலோர் ஸ்டார்-பட்டர்வொர்த் சாலையின் 68ஆவது கிலோமீட்டரில் நேற்று நடந்த சம்பவத்தில், திடீரென யு-டர்ன் செய்த பெரோடுவா மைவி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில், அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் தாயார் உயிரிழந்தார்.
பிற்பகல் 1.55 மணியளவில் மூன்று வாகனங்கள் மோதிய இந்த விபத்தில், பாதிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களில் தாய் மற்றும் மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று தாயார் உயிரிழந்தார்.
சம்பந்தப்பட்ட பெரோடுவா மைவியை கடை உதவியாளராகப் பணியாற்றிய 32 வயது நபர் ஓட்டிச் சென்றது விசாரணையில் கண்டறியப்பட்டதாக கோல மூடா மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் ஜைதி சே ஹாசன் தெரிவித்தார்.
, பெரோடுவா மைவி அதே திசையில் இருந்து வந்ததாகவும், 22 வயது இளைஞன் ஓட்டிச் சென்ற மற்றொரு கார் எதிர் திசையில் இருந்து வந்ததாகவும் அவர் கூறினார்.
“சம்பவத்தின் போது, சம்பந்தப்பட்ட பெரோடுவா மைவியின் ஓட்டுநர் திடீரென யு-டர்ன் செய்தது, அப்போது
தாயும் மகனும் பயணித்த மோட்டார் சைக்கிள் பெரோடுவா மைவியின் முன்பக்கத்தில் மோதியத்தில், பாதிக்கப்பட்ட இருவரும் சாலையில் வீசப்பட்டனர், பின்னர் எதிர் திசையில் வந்த கார் அவர்கள் மீது மோதியது என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
“மோட்டார் சைக்கிள் பயணியான 52 வயதான தாய் மற்றும் அவரது 24 வயது மகன் சிகிச்சைக்காக சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனைக்கு (HSAH) கொண்டு செல்லப்பட்டனர்.
எனினும், அவரது மகன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தாயின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், மாலை 3.05 மணியளவில் அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், அங்கீகரிக்கப்படாத பகுதியில் யூ-டர்ன் செய்த பேரோடுவா மைவி ஓட்டுநரின் கவனக்குறைவால் இந்த சம்பவம் நிகழ்ந்தது என்றும், சாலை போக்குவரத்து சட்டம் 1987 ன் பிரிவு 41 (1) இன் படி வழக்கு விசாரிக்கப்பட்டது என்றும் கண்டறியப்பட்டது.