கோத்தா கினாபாலு, அக்டோபர் 12 :
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பியதையடுத்து, சபாவில் இயங்கிவந்த மூன்று வெள்ள நிவாரண மையங்களும் இன்று பிற்பகல் மூடப்பட்டன.
சபா வெள்ள மேலாண்மைக் குழுவின் செயலகம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், வெள்ளத்தின் காரணமாக வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட 122 பேரும் வீடு திரும்பிய பிறகு, அனைத்து நிவராண மையங்களும் மூடப்பட்டதாகக் அதில் கூறப்பட்டிருந்தது.
கடந்த சனிக்கிழமை முதல் பெய்த கனமழையைத் தொடர்ந்து, சபாவின் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதை அடுத்து, அனைத்து நிவாரண மையங்களும் கடந்த ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் திறக்கப்பட்டன.