கோத்தா கினாபாலு விமான நிலையம் அக்டோபர் 26 வரை தண்ணீர் விநியோகத் தடையை எதிர்கொள்கிறது

கோத்தா கினாபாலு, அக்டோபர் 19 :

தற்போது மோயோக் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக, கோத்தா கினாபாலு அனைத்துலக விமான நிலையம் அக்டோபர் 26 வரை நீர் வழங்கல் தடையை எதிர்கொள்கிறது.

இந்த காலகட்டத்தில் விமான நிலையத்தில் உள்ள உணவு மற்றும் பான விற்பனை நிலையங்கள் தண்ணீரைச் சேமிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் கொள்கலன்களை பயன்படுத்துகின்றன’ என்று மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் வெளியிட்டுள்ள ஒரு டுவீட்டில்
தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஜபாத்தான் ஆயிர் நெகிரி சபா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “நீர் வழங்கலால் பாதிக்கப்பட்ட பகுதிகளான கோத்தா கினாபாலு, பெனாம்பாங் மற்றும் பூட்டான் ஆகிய பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் பராமரிப்பு பணிகள் முடியும் வரை, குறைந்தளவு அழுத்தத்தில் நீரைப் பெறுவார்கள்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் “பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் போதுமான தண்ணீரை சேமித்து, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். நீர் விநியோகம் தொடர்பான விசாரணைகளுக்கு, 088-326888 என்ற எங்களின் 24 மணி நேர பராமரிப்பு மையத்தை அழைக்கலாம் என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here