விவாகரத்து கேட்ட மனைவியை உதைத்த கணவன் கைது

அம்பாங் ஜெயா, அக்டோபர் 20 :

நேற்று, இங்குள்ள தாமான் ஊடா அம்பாங்கில், தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோருவதற்காக ஷரியா நீதிமன்றத்திற்கு செல்ல நினைத்து, கணவரை அவரின் குடும்ப வீட்டிற்கு சென்று அழைத்த மனைவியின் தொடை மற்றும் இடுப்பில் உதைத்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

30 வயதான மழலையர் பள்ளி ஆசிரியையாக பணிபுரியும் பாதிக்கப்பட்ட பெண், நிதி பிரச்சனை காரணமாக கடந்த மே மாதம் முதல் தன்னை விவாகரத்து செய்யுமாறு கணவரிடம் கேட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர் நேற்று காலை 10.30 மணியளவில், 29 வயதான சந்தேக நபரை சந்திக்க அவரது மாமியார் வீட்டிற்குச் சென்றதாக அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் ஃபாரூக் எஷாக் கூறினார்.

விவாகரத்து நோக்கத்திற்காக தனது கணவரை நீதிமன்றத்திற்கு அழைக்க அவரது மாமியார் வீட்டிற்குச் சென்றபோது, சந்தேக நபர் கோபமடைந்து பாதிக்கப்பட்டவரின் தொடை மற்றும் இடுப்பில் இரண்டு முறை உதைத்தார்.

“சம்பவத்தின் விளைவாக, அவர் அம்பாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

“விற்பனையாளராக பணிபுரியம் சந்தேக நபர், திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது என்றும் அவர்களுக்கு எட்டு மாத ஆண் குழந்தை என்றும் அவர் கூறினார்.

வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தியதற்காக குற்றவியல் சட்டத்தின் 323வது பிரிவு மற்றும் குடும்ப வன்முறைச் சட்டம் பிரிவு 18ஏ ஆகியவற்றின் படி, இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

“குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here