வெள்ளம்: அலோர்காஜாவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது

மலாக்கா அலோர்காஜாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மேலும் பலர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். ஐந்து குடும்பங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட 11 பேர் தங்குவதற்கு காடெக் சமுதாய கூடத்தில் நிவாரண மையம் திங்கள்கிழமை இரவு 11 மணிக்கு திறக்கப்பட்டதாக மாநில பேரிடர் மேலாண்மை குழு செயலகம் தெரிவித்துள்ளது.

ஆறு குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 27 பேர் இன்னும் எஸ்.கே. டுரியான் துங்கலில் தங்கியுள்ளனர். அவர்கள் கம்போங் புக்கிட் தம்பூன், கம்போங் புக்கிட் பலாய், கம்போங் பெலிம்பிங் தலாம் மற்றும் கம்போங் புலாவ் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என்று செவ்வாய்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here