இரண்டு நண்பர்களுடன் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற ஆடவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்

குவா மூசாங், அக்டோபர் 27 :

நேற்று சுங்கை கெட்டில், தாமான் வாங்கி என்ற இடத்தில் இரண்டு நண்பர்களுடன் மீன்பிடிக்கச் சென்ற ஒப்பந்ததாரர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

குவா மூசாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர், முகமட் அரிபுதீன் அகிஃப் முகமட் நூர் கூறுகையில், உயிரிழந்த 35 வயதான அஹ்மட் ரைஹான் ஹனிஃப் யூசோப்பின் உடல் மாலை 6 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது.

“அவர் ஆற்றில் விழுந்த இடத்திலிருந்து சுமார் 10 மீட்டர் தொலைவில் மரங்களுக்கு இடையில் சிக்கிக்கொண்டிருக்க கண்டெடுக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

நண்பர்கள் மூவரும், டெலிகாம் மலேசியாவின் வயரிங் ஒப்பந்ததாரர்கள் என்றும், நேற்று நண்பகலில் மீன்பிடிக்க அந்த இடத்திற்குச் சென்றதாகவும் உயிரிழந்தவரின் நண்பரில் ஒருவரான முஹமட் சயாபிக் அஸ்மி, 23, கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஆற்றினைக் கடக்க முயன்றபோது அஹ்மட் ரைஹான் ஆற்றில் விழுந்ததாகவும், வேகமாகப் பாயும் நீரில் அவர் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here