15வது பொதுத்தேர்தல்: நான் ஒருபோதும் எனது பதவியை ராஜினாமா செய்யவில்லை என்கிறார் PBM கட்சியின் தலைவர் லாரி சாங்

சிபு, அக்டோபர் 27 :

“கட்சியின் தலைவர் என்ற முறையில், நான் ஒருபோதும் எனது பதவியை ராஜினாமா செய்யவில்லை அல்லது எனது கட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவில்லை” என்று சாங் நேற்று புதன்கிழமை (அக் 26) வெளியிட்ட ஒரு பேஸ்புக் பதிவில் கூறினார்.

15வது பொதுத்தேர்தலில் போட்டியிடும் PBM கட்சியில் வேட்பாளர்கள் குறித்து, விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

“கட்சித் தலைவர்களால் முன்னர் வெளியிடப்பட்ட அனைத்து அறிவிப்புகளும் வெறும் ஊகங்கள் மட்டுமே. அதிகாரப்பூர்வ அறிவிப்பு நானே வெளியிடுவேன், 15வது பொதுத்தேர்தலில் PBMக்கான வேட்ப்பாளர்கள் தொடர்பான முடிவில் நான் மட்டுமே கையெழுத்திடுவேன்,” என்று அவர் கூறினார்.

சாங்கிற்கு பதிலாக PBM தலைவராக முன்னாள் தோட்டத் தொழில்கள் மற்றும் பொருட்கள் அமைச்சர் டத்தோ ஜுரைடா கமாருடின் நியமிக்கப்பட்டார் என்று முன்னர் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கே அவர் இப்பதிவின் மூலம் விளக்கமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜுலாவ் நாடாளுமன்ற உறுப்பினரான லாரி சாங் 15வது பொதுத் தேர்தலில் பார்ட்டி பங்சா மலேசியா (PBM) கட்சியின் கீழ் தனது தற்போதைய தொகுதியை தற்காப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here