கிளாந்தானில் PerantiSiswa டேப்லேட்டுக்கான விண்ணப்பங்களில் 71 விழுக்காடு அங்கீகரிக்கப்பட்டுள்ளன – உயர்கல்வி அமைச்சர்

கோத்தா பாரு, அக்டோபர் 28 :

புதன்கிழமை (அக். 26) நிலவரப்படி, மலேசிய குடும்பம் (Keluarga Malaysia) திட்டத்தின் கீழ் PerantiSiswa டேப்லேட்டுக்களை பெறுவதற்காக, கிளாந்தானில் உள்ள மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களில் மொத்தம் 14,253 (71 விழுக்காடு) விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்று உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் நோரைனி அஹ்மட் தெரிவித்தார்.

கிளாந்தானில் உள்ள பொதுப் பல்கலைக்கழகங்கள், பாலிடெக்னிக்குகள், சமூகக் கல்லூரிகள் மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து மொத்தம் 20,080 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

மேலும் “அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கான டேப்லேட்டுகள் விநியோகம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here