GE15: பேராக் அமானா 20 சட்டமன்ற தொகுதிகள், 6 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது

ஈப்போ, அக்டோபர் 28 :

15வது பொதுத் தேர்தலில் (GE15) பக்காத்தான் ஹராப்பான் (PH) கூட்டணியின் கீழ் பேராக்கில் போட்டியிட அமானாவுக்கு எட்டு கூடுதல் சட்டமன்ற தொகுதிகளும், இரண்டு கூடுதல் நாடாளுமன்ற தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக பேராக்கின் அமானா தலைவர் டத்தோ அஸ்முனி அவி கூறினார்.

மொத்தத்தில் அமானா 20 மாநில சட்டமன்றத் தொகுதிகளிலும் 6 நாடாளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த GE14 இல் 12 சட்டமன்ற தொகுதிகளிலும் 4 நாடாளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

GE15 இல் அமனாவில் 15 புதிய முகங்கள் இடம்பெறும், அதாவது மாநில சட்டமன்றத்தில் 12 பேரும் நாடாளுமன்றத்தில் மூன்று பேரும் புதிதாக களமிறக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here