வீட்டில் திடீரென ஏற்பட்ட தீயில் சிக்கி மகன் மரணம்; தந்தை காயம்

பிந்துலு, அக்டோபர் 29 :

இங்குள்ள தாமான் கெமெனா ராயாவில் உள்ள இரண்டு மாடி வீட்டின் தரை தளத்தில் உள்ள தனது படுக்கையறையில் திடீரென ஏற்பட்ட தீயில் சிக்கி, ஆடவர் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்தார், அவரின் தந்தை தீக்காயங்களுக்குள்ளானார்.

இச்சம்பவத்தில், மோவ் சீ மோங் (54) என அடையாளம் காணப்பட்ட ஆடவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இரவு 8.25 மணிக்கு சம்பவம் தொடர்பில் அழைப்பைப் பெற்ற பின்னர், மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மண்டலம் 5, பிந்துலு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் மற்றும் கிடுரோங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உறுப்பினர்கள் குழு என்பன அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது.

பாதிக்கப்பட்ட இருவரையும் பொதுமக்கள் ஏற்கனவே வீட்டிலிருந்து அகற்றியதை அங்கு வந்த தீயணைப்பு துறையினர் கண்டறிந்தனர்.

அவசரகால சேவைகள் உதவிப் பிரிவின் (EMRS) உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்ப சிகிச்சை அளித்தனர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பிந்துலு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

“எனினும், உடலில் தீக்காயங்களால் அதிகம் பாதிக்கப்பட்ட மோவ் சீ மோங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

“தீ விபத்தில் பாதிக்கப்பட்டவரின் படுக்கையறை சுமார் 20 சதவிகிதம் அழித்தது,” என்று அவர் கூறினார்.

தீவிபத்துக்கான காரணம் இதுவரை விசாரணையில் உள்ளது என்றும் பாதிக்கப்பட்டவரின் 82 வயதான தந்தை தற்போது நிலையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here