பத்து பஹாட்: ஸ்ரீ காடிங் KM12 ஜாலான் குளுவாங்-பத்து பஹாட் என்ற இடத்தில் கார் விளக்குக் கம்பத்தில் மோதியதில் 26 வயதான பெண் ஒருவர் உயிரிழந்தார்.அவரது கணவர் மற்றும் குழந்தை காயமடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை (அக் 30) இரவு 9.45 மணியளவில் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு அறிக்கை கிடைத்ததாக பத்து பஹாட் OCPD உதவி ஆணையர் இஸ்மாயில் டோல்லா கூறினார்.
எங்கள் விசாரணையில், ஓட்டுனர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே உள்ள பாதையில் செல்வதற்கு முன், சாலைப் பிரித்திலுள்ள விளக்குக் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. 31 வயதுடைய ஓட்டுநர் பலத்த காயம் அடைந்தார், அவரது மனைவி சமுபவ இடத்திலேயே இறந்துவிட்டார். தம்பதியரின் குழந்தை, நான்கு வயது சிறுவனுக்கு சிறிய காயம் ஏற்பட்டது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
காயமடைந்தவர்கள் சுல்தானா நோரா இஸ்மாயிலுக்கு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதாகவும் ஏசிபி இஸ்மாயில் கூறினார். சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41(1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
பெங்காரம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுத் தளபதி நூர் முகமட் பிட்மேன் கூறுகையில், மீட்புப் பணியை மேற்கொள்ள 13 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவரும் காருக்குள் சிக்கிக்கொண்டனர் மற்றும் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி மீட்கப்பட்டனர் என்று அவர் கூறினார்.