பேருந்து நிலையத்தில் உள்ள பெட்டியில் இப்போதுதான் பிறந்தது என நம்பப்படும் ஆண் குழந்தை கண்டெடுப்பு

செர்டாங், அக்டோபர் 31 :

ஜாலான் SB இன்டா 2, தாமான் சுங்கை பேசி இன்டா, ஸ்ரீ கெம்பாங்கானில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்னால் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்த பெட்டியில், இப்போதுதான் பிறந்து கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆண் குழந்தை ஒன்று, இன்று கண்டெடுக்கப்பட்டது.

செர்டாங் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் ஏ.ஏ.அன்பழகன் கூறுகையில், காலை 9.25 மணிக்கு ஒரு நபரிடமிருந்து இந்த சம்பவம் குறித்து தமது தரப்புக்கு தகவல் கிடைத்தது என்றார்.

“முதற்கட்ட விசாரணையில், ஸ்ரீ கெம்பாங்கான், சுங்கை பேசி இன்டா அடுக்குமாடி குடியிருப்புக்கு எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில் உள்ள ஒரு பழுப்பு நிற பெட்டியில் ஆண் குழந்தை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது”.

“மேலதிக பரிசோதனைக்காக ஆண் குழந்தை செர்டாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சாட்சிகளைக் கண்டறிவதற்கான முயற்சிகள் மற்றும் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்யும் முயற்சிகள் நடந்து வருவதாக அவர் கூறினார்.

குற்றவியல் சட்டம் பிரிவு 317ன் படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here