GE15 பொதுத் தேர்தலில் வேறு கட்சி சின்னத்தில் போட்டியிடும் ஆராவ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாஹிதான் காசிம் மற்றும் மூன்று பேரை அம்னோ பதவி நீக்கம் செய்துள்ளது.
ஷாஹிதானைத் தவிர பாடாங் பெசார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜாஹிதி ஜைனுல் ஆபிதீன் மற்றும் முன்னாள் மாறான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் அப்துல் முத்தலிப் ஆகியோரும் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
அம்னோ பொதுச்செயலாளர் அஹ்மட் மஸ்லான் ஒரு அறிக்கையில், கோல பெர்லிஸ் மாநிலத் தொகுதியில் போட்டியிடும் அசார் அகமதுவின் உறுப்பினர் பதவியும் நீக்கப்பட்டதாகக் கூறினார்.