2022 சிலாங்கூர் மாநில துக்காங் வடிவமைப்பு பெருவிழா

‘துக்காங்’ என்பது தேசிய அடையாளச் சின்னங்களை இரட்டிப்பாக்கும் கலைப் படைப்புகளை உருவாக்குவதில் நிபுணத்துவம் வாய்ந்த நபரின் பெயர்ச் சொல்லாகும். பாரம்பரிய கைவினைக் கலைகளின் வளர்ச்சியை – முக்கியப் பங்களிப்பை வழங்கும் திறமையான கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் சிலாங்கூர் சுற்றுலாத்துறையின் கீழ் இயங்கும் தொழில்துறை மேம்பாட்டுப் பிரிவினரால் இச்செயல் திட்டம் மேற்கொள்ளப் படுகிறது.

இவ்வாண்டு விண்ணப்ப முன்மொழிவுக்கான கால அவகாசம் மே 7ஆம் தொடங்கி ஜூன் 19ஆம் தேதி வரை வழங்கப்பட்டிருந்தது. அச்சமயத்தில் சிலாங்கூர் சுற்றுலாத்துறைக்கு கைவினை உற்பத்தியாளர்கள், கலைஞர்கள், கல்வி விரிவுரையாளர்கள் என பல்வேறு தரப்பினரிடமிருந்து 37 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவர்கள் உள்நாட்டுக் கலை- கைவினைத் தயாரிப்புகளில் புதிய புத்தாக்கச் சிந்தனையை முன் வைத்துள்ளனர்.

அந்த விண்ணப்பங்களுள் 6 பேர் நீதிபதி செயற்குழுவைக் கவர்ந்து அடுத்த அக்டோபரில் கண்காட்சியில் இடம் பெறுவதற்கான கலைத் தயாரிப்புகளை உருவாக்க தலா 10 ஆயிரம் ரிங்கிட் மானியம் பெற்றுள்ளனர். Tukang- சிலாங்கூரில் முதல் கைவினைத் திட்டம். இது கைவினைக் கலைஞர்கள் குறிப்பாக, சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், தங்களின் வேலைத் திறன், சிறந்த வடிவமைப்பை வெளிப்படுத்த ஒரு மகத்தான வாய்ப்பு வழங்கப்படுகின்றது.

10 ஆயிரம் ரிங்கிட் மானியம் பெறப்பட்டதும் அந்த 6 வெற்றியாளர்களும் தங்கள் திறனை வெளிப்படுத்தி கைவினைப் பொருட்களை உருவாக்க 3 மாத கால அவகாசம் வழங்கப்படும்.

துக்காங் தயாரிப்புக் கண்காட்சி, பயிலரங்கம் போன்ற உற்சாக நிகழ்ச்சிகள் நவம்பர் மாதம் கேலரி ஷாஆலமில் நடைபெறுகின்றது.

கலைஞர்களின் தகவல்கள்
1) (Tukang Selangor 1 – GHARIB + BATIKTEKTURA)
குழுப் பெயர்: (GHARIB + BATIKTEKTURA)
திட்டப் பெயர்: (MOK POD)
கலைஞர்கள்:-
– ஸுல் ஃபட்ஸ்லி முகமட் சாலே
– நூர் அஸ்ரினா பிந்தி லாசா
– யெஸ்ரின் பிந்தி முகமட் யூசோப்

GHARIB + BATIKTEKTURA

MOK POD என்பது பாரம்பரிய மலாய் மரப்பலகை வீட்டின் சம கால விளக்கமாகும். இந்த மலாய் பாரம்பரிய மரப் பலகை கட்டடங்கள், கட்டமைப்புகளில் ஆணிகள், இரும்பு ஸ்குருகள் பயன்படுத்தாமல் தங்காம் எனும் பிரத்தியேக மரப் பசை முறை பயன்படுத்தி இணைக்கப்படுகின்றது.

மேலும் தரை, சுவர், கூரைகளும் பாத்தேக் துணி, அக்ரிலிக் கலவை மூலம் செய்யப்படுகின்றது. இந்த இணைப்பானது நவீன, பாரம்பரிய அம்சங்களின் கலவையாக விளங்குகின்றது. அதே போல் பூங்கா தஞ்சோங், மிமுசோப் எலெங்கி (சிலாங்கூர் மாநிலப் பூ) ஆகிய வடிவமைப்புகளும் இதில் இடம் பெறுகின்றன.
இந்த MOK POD கலந்துரையாடல் நடத்துவதற்கு, உறங்குவதற்கு, ஓய்வெடுப்பதற்கு போன்ற பல்வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்தப் படுகின்றன. இதனை உட்புறங்களிலும் வெளிப்புறங்களிலும் பயன்படுத்தலாம்.

2. (Tukang Selangor 3 – Ecovs)
குழுப் பெயர்: Ecovs
திட்டப் பெயர்: (Sustainable Innovative Batik Block Tool)

கலைஞர்கள்:-
– நூருல் நஜ்வா பிந்தி மா’ரிஸ்
-அலிஃப் நக்கியுடின் பின் அப்துல் ஹலிம்-(Lestari Ikat Batik)
-முகமட் நூர் அமின் பின் ஸாஹார்- (Lestari Ikat Batik)

Ecovs

பாத்தேக் புளோக் என்பது பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு மதிப்புமிக்க பாரம்பரிய தேசிய அடையாளமாகும். தாமிரத்தின் விலை உயர்வு, இளைய தலைமுறை மத்தியில் ஆர்வமின்மை போன்ற பல்வேறு அம்சங்களால் இந்த பாத்தேக் புளோக் செய்முறை தொழிலை வருங்காலத்திற்காகப் பாதுகாப்பது கடினமாகின்றது.

புதிய பாத்தேக் உற்பத்தி முறைகள், பொருட்கள், நுட்பங்களை ஆராய்வதன் மூலம் மலேசிய பாத்தேக் வளர்ச்சியை எளிதாக்கும் கைவினைப் பொருட்களில் ஒன்றாக பாத்தேக் புளோக்கை நிலைநிறுத்தக்கூடிய கருவிகள், கலைஞர்கள் உறுதிப்படுகின்றனர்.

எங்கள் திட்டத்தின் கோட்பாடு செஇண்டா பாத்தேக் சிலாங்கூர் ஆகும். இதில் பாத்தேக் புளோக், மை நுட்பத்தைக் கலந்து உள்ளோம். சிலாங்கூர் மாநிலத்தை விவரிக்கும் தாவர- விலங்கு இனங்களை இதில் முன்னிலைப்படுத்துகின்றோம்.
இந்த பாத்தேக் புளோக் செய்வதற்கு நாங்கள் பயன்படுத்தும் முதன்மைப் பொருள் தேங்காய் மட்டையாகும்.

3) (Tukang Selangor 3 – WarenaKita)
திட்டப் பெயர்: (Tepak Ulam)
கலைஞர்கள்:-
– ஹனிஷா பிந்தி நோர்டின்
– அரிஃப் பின் அமாட் அஃபாண்டி
– பல்கிஸ் பிந்தி முகமட் தாஜால்லி

WarenaKita

Tepak Ulam என்பது கடந்த காலம், நிகழ்காலத்தின் சுவை உணர்வை இணைக்கும் பாரம்பரியமிக்க நுசாந்தாரா உணவு கலாச்சாரமாகும். இந்த Tepak Ulam தயாரிப்பில் செராமிக், உருவாக்க அச்சீடு, 3டி வடிவமைப்பு ஆகிய அம்சங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துகின்றது.

சிலாங்கூரில் தொழில்துறை பல நிலையிலான நிலப்பரப்புகளால் ஈர்க்கப்பட்டு களிமண், மரம், இலைகள் என பூமியின் கூறுகளை ஒன்றிணைத்து அதன் அழகை வெளிப்படுத்தி உணவு கலாச்சாரத்தில் சமர்ப்பிக்கின்றோம்.

4) (Tukang Selangor – Inside RG)
திட்டப் பெயர்: T.I.K.A.R ( TRANSFORMASI INOVASI KONSERVASI DA APRESIASI REKABENTUK)
கலைஞர் : -வடிவமைப்பு, கலை உருவாக்கப் பிரிவு

Inside RG

இது DEMOCRAFT (Democratic in Craft) என்ற உள்ளடக்கத்தைக் கொண்ட வடிவமைப்பாகும். இந்த வடிவமைப்பானது எளிய வடிவம், செயல்பாடு, தரம், நிலை, மலேசியக் கலாச்சார அடையாளம் ஆகிய அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றது. இந்த வடிவமைப்பு நகர்ப்புற வாடிக்கையாளர்களின் புதிய இலக்காகக் கொண்டுள்ளது.

அதில் இடம் பெற்றுள்ள தளவாடங்கள், வடிவமைப்புகள் அனைத்தும் நிலையான அழகியல் மதிப்பை வலியுறுத்துகிறது.

5) (Tukang Selangor – Leon & Hani)
திட்டப் பெயர்: A Piece of Kampung
கலைஞர்:-
லியோன் லியோங் வாய் புங், இதர கலைஞர்கள்

Leon- Hani

A Piece of Kampung எனும் வடிவமைப்பு செயல்திட்டமானது நகர்ப்புற வீடுகளில் கம்பத்து அம்சங்களைக் கொண்டுவரும் நோக்கத்தைக் கொண்ட திட்டமாகும். மலேசியாவின் பூர்வீகக் கட்டடக் கலையை முன் மாதிரியாகக் கொண்டு இந்த A Piece of Kampung வடிவமைப்பு மரத் தயாரிப்புகளை உள்ளடக்கி தங்காம் எனும் பாரம்பரிய பசை முறையில் இணைக்கப்பட்ட வடிவமைப்பாகும். இது கைவினைப் படைப்பாகும். மேலும், சம கால வாழ்க்கை செயல்பாட்டிற்கு ஏற்ப கலாச்சார பாரம்பரிய, அழகியல் அம்சங்கள் உடன் இணைக்கப்பட்டுள்ளன.

6. (Tukang Selangor – Fabcafe)
குழுப் பெயர்: Fabcafe
திட்டப் பெயர்: (Re:Vision)

Fabcafe

விளக்குகள், வண்ணங்கள், பிரதிபலிப்புகள் மூலம் பூர்வக்குடியினரின் பாரம்பரிய பயன்பாட்டுப் பொருட்கள், வடிவங்களை மக்கள் காணக்கூடிய மிகப் பெரிய kaleidoscope உருவாக்குகின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here