தனது அந்தரங்க உறுப்புகளை புகைப்படம் எடுத்ததாக 14 வயது மாணவன் ஆசிரியர் மீது குற்றம் சாட்டியுள்ளார்

மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது அந்தரங்க உறுப்புகளை புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியதாக 14 வயது பள்ளி மாணவன் போலீசில் புகார் செய்துள்ளார்.

அவர்கள் ஃபுட்சல் விளையாடிக் கொண்டிருந்தபோது ஆசிரியர் மீது தவறுதால் அடிப்பட்டு விட்டதாகவும் ஆசிரியர் தன்னை ஒரு ஸ்டோர்ரூமுக்குள் இழுத்துச் சென்றதாக சிறுவன் போலீஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் கதவை மூடிவிட்டு கால்சட்டையை கழற்றி தரையில் படுக்கச் சொன்னதாக அவர் கூறினார். பின்னர் ஆசிரியர் தொலைபேசியைப் பயன்படுத்தி சிறுவனின் அந்தரங்க உறுப்புகளை புகைப்படம் எடுத்தார் என்று அறிக்கை கூறுகிறது.

ஆசிரியர் தன்னை காலரைப் பிடித்து சுவரில் அழுத்தித் தாக்கியதாகவும் சிறுவன் குற்றம் சாட்டினான்.

இந்த அறிக்கை குறித்து கிள்ளான் செலாத்தான் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர் என்று எப்ஃஎம்டி தெரிவித்துள்ளது.

சிறுவனின் குடும்பத்தினரின் வழக்கறிஞர் விமல் அரசன், அந்த அறிக்கையை திரும்பப் பெறுமாறு பள்ளி சிறுவனுக்கு அழுத்தம் கொடுத்தது. ஆனால்  விமல் அவரிடம் பேசிய பிறகு புதிய அறிக்கை பதிவு செய்யப்பட்டது. ஆசிரியர் தனது மாணவரை கையாள்வதை மற்ற ஐந்து மாணவர்கள் பார்த்ததாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here