நவம்பர் 10 முதல் நவம்பர் 16 வரையிலான வாரத்திற்கு RON95 மற்றும் RON97 பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விலையில் மாற்றமில்லை.
நிதி அமைச்சகம் (MOF), இன்று வெளியிட்ட அறிக்கையில், RON97, RON95 மற்றும் டீசல் ஆகியவற்றின் சில்லறை விலை லிட்டருக்கு முறையே RM3.95, RM2.05 மற்றும் RM2.15 ஆக இருக்கும்.
உலகளாவிய எண்ணெய் விலை உயர்விலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்க, அரசாங்கம் RON95 இன் உச்சவரம்பு விலையை லிட்டருக்கு RM2.05 ஆகவும், டீசல் ஒரு லிட்டருக்கு RM2.15 ஆகவும் பராமரிக்கும், இரண்டு பொருட்களின் சந்தை விலையும் தற்போதைய உச்சவரம்பு விலையைத் தாண்டி அதிகரித்திருந்திருகிறது.
தானியங்கி விலை நிர்ணய பொறிமுறை சூத்திரத்தைப் பயன்படுத்தி பெட்ரோலியப் பொருட்களின் வாராந்திர சில்லறை விலையின் அடிப்படையில் விலைகள் நிர்ணயிக்கப்பட்டன.
உலகளாவிய கச்சா எண்ணெய் விலையின் போக்குகளை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் தொடர்ச்சியான நலன் மற்றும் நல்வாழ்வை உறுதிசெய்ய பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.