பாதிக்கப்பட்ட LRT பயனர்களுக்கு உதவ 20 பேருந்துகள் நாளை முதல் சேவையில் ஈடுபடும் – சிலாங்கூர் மாநில அரசு

ஷா ஆலாம், நவம்பர் 9 :

கெலானா ஜெயா முதல் அம்பாங் வரையிலான வழித்தடத்தில் இலகு ரயில் (LRT) சேவையின் இடையூறுகளால் 16 ரயில் நிலையங்களின் செயல்பாடுகள் தடைப்பட்டுள்ளன. எனவே பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு உதவும் வகையில், நாளை முதல் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தும் நோக்கில் 20 பேருந்துகளை சிலாங்கூர் மாநில அரசு வழங்கவுள்ளது.

சிலாங்கூர் மந்திரி பெசார், டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறுகையில், இந்த விஷயத்தை உள்ளாட்சி, பொதுப் போக்குவரத்து மற்றும் புதிய கிராம மேம்பாட்டு நிலைக்குழுவின் தலைவர் Ng Sze Han, RapidKL உடன் இன்று விவாதிப்பார் என்றார்.

“எல்ஆர்டி சேவை இடையூறுகள் காரணமாக வேலைக்குச் செல்வதற்கும் திரும்புவதற்கும் பாதிக்கப்படும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவ, இந்த 20 பேருந்துகளின் பயன்பாட்டை அதிகப்படுத்த முயற்சிக்கிறோம்,” என்று அவர் இன்று நடந்த சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here