தேர்தலுக்குப் பிறகான கூட்டணி பற்றி பேசவில்லை: அன்வார்

GE15  கபுங்கன் பார்ட்டி சரவாக்குடன் (ஜிபிஎஸ்) பொதுத் தேர்தலுக்குப் பிறகான  கூட்டணி  குறித்து  இதுவரையிலும்    பேசவில்லை என்று  பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். PH இன் கவனம் GE15ஐ வெல்வதில் இருப்பதாகவும், அரசியல் கூட்டணிகளுடனான பேச்சுவார்தைகள்  தேர்தலுக்குப் பிறகுதான் நடைபெறும் என்றும் அன்வார் கூறினார்.

மாநிலத்தில் உள்ள மக்களின் நலன்களைப் பாதுகாக்க “மாநில-கூட்டாட்சி” குழுவாக ஒன்றிணைந்து செயல்படும் வகையில், GE15ல் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு வலுவான குரல் கொடுக்குமாறு  அவர் வலியுறுத்தினார். இப்போது, ​​சரவாக் மற்றும் சபாவில்  வலுவான பிரதிநிதித்துவம் தேவை. இரு மாநிலங்களிலும் உள்ள  மக்களிடமிருந்து கருத்துக்களைப் பெறுவது முக்கியம் என்று  செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்.

நாட்டை வலுப்படுத்த சபா, சரவாக் மற்றும் தீபகற்பத்திற்கு இடையே அதிகாரப் பகிர்வுக்கு  முக்கியத்துவம் அளிப்பேன் என்று உறுதியளித்தார்.  கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு தொடர்பான பிரச்சினைகளில்  இரு மாநிலங்களும்  மக்களின் தேவைகளைப் புரிந்து கொள்ளும் திறனைக் கொண்டிருப்பதால் அவற்றைக் கையாள அனுமதிக்க வேண்டும் என்றார்.

ஊழலை தவிர்க்கும் வகையில் தெளிவான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வு அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது,” என்றார் அவர்.  “இந்த தேசத்தில் இனவாதம் தொடரக் கூடாது இதை மனதிற்கொண்டு மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும், நவம்பர் 15-ம் தேதி முன்கூட்டியே வாக்குப்பதிவு நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here