LRT சேவைகள் விரைவில் தொடங்கும் : இஸ்மாயில் சப்ரி தகவல்

நவம்பர் 9 முதல் தடைபட்ட இலகு ரயில் போக்குவரத்து (எல்ஆர்டி) சேவைகள் திட்டமிட்டதை விட விரைவில் மீட்டமைக்கப்படும் என்று  தற்காலிக  பிரதமர் இஸ்மாயில் சப்ரி  இன்று தெரிவித்தார்.

டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறுகையில், ரேபிட் ரெயிலின் தொழில்நுட்பக் குழுவால் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கனடா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த சிஸ்டம் தயாரிப்பாளரான தேல்ஸ் குழுமத்தின் வழிகாட்டுதலின்  படி பழுதடைந்ததற்கான காரணத்தை கண்டறிய போக்குவரத்து அமைச்சகம் தலைமையில் ஒரு குழுவை அரசு அமைத்துள்ளது என்றார்.

இதுவரை, கோம்பாக்-புத்ரா ஹைட்ஸ் வழித்தடத்தில் 38  ரயில்களை இயக்கியதில்  பாதுகாப்பு அமைப்புகள் அனைத்தும்  நிலையானதாக இருப்பதாகவும்,  கிள்ளானா ஜெயா LRT  வழிதடம்  பாதுகாப்பானது மற்றும் நிலையானது என்றும் கூறினார்.

தகவல் தொடர்பு அமைப்புகள்   மீண்டும் சோதிக்கப்பட்டு, நவம்பர் 15 ஆம் தேதிக்கு முன்னதாக கிள்ளானா ஜெயா எல்ஆர்டி  தடத்தில் பாதுகாப்பாக இயக்கப்படும்  என்று  இங்குள்ள கோலா பெராவில் உள்ள கம்போங் பத்து பாபானில் நடந்த மக்கள் சந்திப்பிற்குப் பிறகு கூறினார்.

தானியங்கி இரயில் கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நவம்பர் 9 முதல் 15 வரை கிள்ளானா ஜெயா மற்றும் அம்பாங் பூங்காவிற்கு இடையே உள்ள 16 நிலையங்களில் எல்ஆர்டி சேவைகள் நிறுத்தப்படுவதாக RapidKL அறிவித்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here