ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு- 449 ஆக உயர்வு

ஜோகூர் பாரு, நவம்பர் 14 :

ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகிறது. தற்போது 104 குடும்பங்களைச் சேர்ந்த 449 பேர் அங்குள்ள ஐந்து மாவட்டங்களில் உள்ள ஒன்பது தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

இன்று காலை 8 மணியளவில் பதிவான 75 குடும்பங்களைச் சேர்ந்த 319 பேருடன் ஒப்பிடும்போது, தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இன்று அதிகாலை சுமார் 5 மணி நேரம் பெய்த கனமழையால் பல மாவட்டங்களிலுள்ள பிரதான ஆற்றின் நீர்மட்டம் பெருக்கெடுத்து ஓடியதைத் தொடர்ந்து, வெள்ள பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழு (JPBD) அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here