கடுமையான விசா விதிமுறைகளால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவு : நான்சி

சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் நான்சி சுக்ரி,  கடுமையான விசா விதிமுறைகளால்   சுற்றுலாப் பயணிகளின்  வருகை  குறைந்துள்ளதாக தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இரண்டு மில்லியன்  சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் திட்டங்களை வகுத்தோம். எங்களின் செயல் திட்டம் வெற்றிப் பெற்றதால்  4.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள்  என இலக்கு   நிர்ணயித்தோம் இருப்பினும், கடுமையான விசா  விதிமுறைகள்  காரணமாக இலக்கை அடைய முடியாமல் போனது என்று நான்சி கூறினார்.

26.8 பில்லியன் ரிங்கிட் செலவழிக்கும் சுற்றுலாப் பயணிகளால் நாட்டின் பொருளாதாரம் ஊக்குவிக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம், ஆனால் நாட்டிற்குள் நுழைவது அவர்களுக்கு கடினமாக இருந்ததாகத் தெரிகிறது, எனவே அவர்கள் வேறு இடங்களுக்குச் செல்லத் திட்டமிட்டனர்.

விசா சிக்கல்கள் காரணமாக சுற்றுலா பயணிகளின் விருப்பத் தேர்வாக  இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தில்  நம் நாடு இருப்பதை நாங்கள் விரும்பவில்லை  என்றும் தனது அமைச்சகம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய ஒன்று என்றும் அவர் கூறினார்.

உலகப் பொருளாதாரம் அடுத்த ஆண்டு மந்தநிலையை நோக்கிச் செல்லும் நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை மீட்க சுற்றுலாத் துறை உதவும் என்று நான்சி கூறினார்.  சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும்  தொழில்துறையை ஆதரிக்கவும்  புதிய  இரண்டு  மானிய திட்டங்களை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here