புத்ராஜெயா நாடாளுமன்றத் தொகுதியில் டத்தோஸ்ரீ டெங்கு அட்னான் டெங்கு மன்சோர் மற்றும் டத்தோ டாக்டர் ராட்ஸி ஜினின் போன்ற தலைவர்கள் இருந்தபோதிலும், பக்காத்தான் ஹராப்பான் நிச்சயம் வெற்றியைப் பெறும் என்று ரஃபிஸி நம்பிக்கைத் தெரிவித்தார்.
புத்ராஜெயா கிள்ளான் பள்ளத்தாக்கில் அமைந்திருப்பதாலும், நகர்ப்புறத் தொகுதியாக இருப்பதாலும் நிச்சயம் வெல்லும் என்றும், வாக்காளர்கள் PH-ன் தேசிய அளவிலான வலிமையை விரும்புகின்றனர் என்றும் பிகேஆர் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி கூறினார்
நகர்ப்புறத் தொகுதியில் வெற்றிபெற விரும்பும் எந்தக் கட்சிக்கும் மிகப்பெரிய காரணிகளில் ஒன்று அதன் தேசிய அளவிலான வலிமை ஆகும். வேட்பாளர்கள் தேசத்திற்கு மட்டுமல்ல, தங்களுக்கு என்ன செய்யவார்கள் என வாக்காளர்கள் எதிர்பார்க்கின்றனர். புத்ராஜெயாவில் 100 சதவீத நகர்புற மக்கள் வாழ்கின்றனர்.
கிராமப்புறங்களில், வாக்காளர்கள் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி ஒரு சிறந்த அதிகாரியாக இருக்க விரும்புகிறார்கள். கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள வாக்காளர்களின் ஆதரவைப் பார்க்கும் போது PH முன்னணியில் உள்ளது.கிராமப்புறங்களில், வேட்பாளர்கள் முன்கூட்டியே களத்தில் இறங்க வேண்டும். அவர்கள் வீடு வீடாக பிரச்சாரம் செய்ய வேண்டும், நேரம் என்பது ஒரு முக்கிய காரணியாக உள்ளது என்று பேசியுள்ளார்.















