RM 60 மில்லியன் செலவில் வெள்ள பாதிப்புகளைக் குறைக்கும் திட்டம்:ஷா ஆலமில் தொடக்கம்

ஷா ஆலம்   பகுதியில் சுமார்  RM60 மில்லியன்   பொருட்செலவில் வெள்ள பாதிப்புகளை  தடுக்கும் திட்டப்பணிகள்  டிசம்பரில்  தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  சிலாங்கூர் உள்கட்டமைப்பு மற்றும் பொது வசதிகள் குழுத் தலைவர் இஷாம் ஹாஷிம் கூறுகையில்  இது வடிகால் அமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டம் என்று கூறினார்.

திட்டத்திற்கு தேவையான பொருட்கள்  கொள்முதல் செய்யப்பட்டு, தற்போது  ஒப்பந்தம்  வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  குறுகிய காலத்திற்குள் வரையறுக்கப்பட்ட  ஒப்பந்தங்களை  மேற்கொள்ள ஷா ஆலம் நகர சபையை (MBSA) மாநில அரசு கேட்டுக்கொண்டது.

ஷா ஆலமின் கோட்டா கெமுனிங்கில் சுங்கை கிள்ளான் அகழ்வுப் பணிகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய போது, பொதுவாக ஒப்பந்த நடைமுறைகள் 21 நாட்களுக்கு விளம்பரம்  செய்யப்படும் ஆனால் இந்த முறை நாங்கள் ஒரு வார அறிவிப்பை மட்டுமே தருகிறோம். அதன் பிறகு, மதிப்பீட்டு செயல்முறை நடைபெற்று அடுத்த மாதம்   திட்டம் தொடங்கப்படும் என்று கூறினார்.

முன்னதாக, எம்பிஎஸ்ஏ இந்த திட்டத்தை இரண்டு கட்டங்களாகப் பிரித்து, RM60 மில்லியன் ஒதுக்கீடு  செய்துள்ளது.  இதற்கிடையில்  சுங்கை கிளாங்கின் 56 கிலோமீட்டர் நீளத்தை ஆழப்படுத்தி அகலப்படுத்தும் திட்டம் குறித்து கருத்து தெரிவித்த இஷாம், ஆற்றில் அதிக அளவிளான கழிவுகள்  பல ஆண்டுகளாக தேங்கியுள்ளன.  பணிகளை விரைவுபடுத்த மற்றொரு பெரிய  இயந்திரத்தை பயன்படுத்த உள்ளோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here